​​ மோட்டார் பைக் பந்தயத்தின் போது இரு வீரர்களுக்கு இடையே சண்டை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மோட்டார் பைக் பந்தயத்தின் போது இரு வீரர்களுக்கு இடையே சண்டை

Published : Sep 11, 2018 7:08 AM

மோட்டார் பைக் பந்தயத்தின் போது இரு வீரர்களுக்கு இடையே சண்டை

Sep 11, 2018 7:08 AM

இத்தாலி நாட்டில் நடந்த என்ற மோட்டர் பைக் பந்தயத்தில் சண்டையிட்ட இரு வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சான் மரினோ என்ற இடத்தில் மோட்டோ 2 என்ற பெயரில் மோட்டார் பைக் பந்தயம் நடத்தப்பட்டது. அப்போது ரொமானோ பெராட்டி ((Romano Fenati)) என்ற வீரர் ஸ்டெபானோ ((Stefano)) என்பவரைக் கடந்து செல்லும் போது இடித்ததால் ஸ்டெபானோ பைக்கின் வேகம் குறைந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர், ரொமானோவை விரட்டிச் சென்று பைக்கினால் இடித்து கீழே தள்ளினார்.

ஆனால் ஸ்டெபானோவை பழிவாங்கும் நோக்கில் தடுப்புக்காக அமைக்கப்பட்டிருந்த சாக்கு மூட்டையால் மீண்டும் அவரைத் தாக்க அவரும் கீழே விழுந்தார்.

இருவரின் சண்டையால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து இருவரும் தகுதியிழப்பு செய்யப்பட்டு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.