​​ வைகை அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வைகை அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறப்பு

Published : Sep 11, 2018 6:19 AM

வைகை அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறப்பு

Sep 11, 2018 6:19 AM

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து மதுரை, சிவகங்கை,ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

நேற்று மாலை அணையிலிருந்து வினாடிக்கு 2ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. ஏற்கனவே கால்வாயில் 1,900 கனஅடியும், 58 கிராம பாசன கால்வாயில் 90 கனஅடியும், மதுரை, ஆண்டிபட்டி -சேடபட்டி கூட்டுக் குடிநீருக்கு 60 கனஅடிதண்ணீரும் வினாடிக்கு திறந்து விடப்பட்டு வருகிறது.  தொடர்ந்து நீரின் இருப்பை பொறுத்தும், நீர்வரத்தைப் பொறுத்தும், நீர்திறப்பின் அளவு மாறுபடும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.