​​ மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கோவில் விழாவில் ஆன்மீக நடனம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கோவில் விழாவில் ஆன்மீக நடனம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கோவில் விழாவில் ஆன்மீக நடனம்

Sep 10, 2018 9:32 PM

 நெல்லை மனோன்மனியாம் சுந்தரனார் பலகலைகழக துணைவேந்தர் பாஸ்கர் கோவில் விழாவில் ஆன்மீக நடனமாடிய வீடியோ வெளியாகி உள்ளது.

நெல்லை மனோன்மனியாம் சுந்தரனார் பலகலைகழக துணைவேந்தராக பொறுப்பு வகித்து வருபவர் பாஸ்கர் ..! தேர்வு கட்டணத்தை உயர்த்தி மாணவர்களின் கடுமையான எதிர்ப்பை சந்தித்த பாஸ்கர் தற்போது கோவில் கோவிலாக சாமி தரிசனம் செய்து வருகின்றார்.

அந்த வகையில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நெல்லை அருகன்குளம் பகுதியில் அமைந்துள்ள எட்டெழுத்து பெருமாள் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார் துணைவேந்தர் பாஸ்கர். அப்போது கோவிலில் மேளம் முழங்க அந்த கோயிலின் நிர்வாகியான ராஜூ சுவாமியுடன் சேர்ந்து பக்தி பரவசமாக ஆன்மீக நடனமாடினார் துணைவேந்தர் பாஸ்கர்

பொதுவாக, பெருமாள் கோயில்களில் சாமியாடுவதில்லை . ஆனால் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் வினோதமாக துணைவேந்தரின் நடனம் அரங்கேறியுள்ளது என்கின்றனர் பக்தர்கள்

கையில் கொடுக்கப்பட்ட சிறிய குச்சி ஒன்றை இரு கைகளாலும் பிடித்துக் கொண்ட துணைவேந்தர், மேலாடை இல்லாமல் மாலை அணிந்தபடியே உற்சாகமாக நடனமாடியதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

துணைவேந்தரின் ஆன்மீக நடனத்தை மாணவர்கள் வேக வேகமாக வாட்ஸ் ஆப்பில் பரப்பி வருவதால் இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது .