​​ பல் மருத்துவ படிப்புக்கான இறுதிகட்ட கலந்தாய்வு நிறைவு..!
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பல் மருத்துவ படிப்புக்கான இறுதிகட்ட கலந்தாய்வு நிறைவு..!

பல் மருத்துவ படிப்புக்கான இறுதிகட்ட கலந்தாய்வு நிறைவு..!

Sep 10, 2018 9:10 PM

தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் பிடிஎஸ் படிப்புக்கான இறுதிகட்ட கலந்தாய்வு முடிவுற்ற நிலையில், அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் மொத்தம் 540 இடங்கள் காலியாக உள்ளன.

தமிழகத்தில் உள்ள18 தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் BDS சேர்க்கைக்காக இரண்டு கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற்றது. அதன் முடிவில், அரசு ஒதுக்கீட்டில் 264 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 569 இடங்களும் நிரப்பப்படாமல் இருந்தன. அந்த இடங்களில் சேர தகுதிவாய்ந்த, இதுவரை விண்ணப்பிக்கதவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி 207 பேர் புதிதாக விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து இறுதிகட்ட கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் காலையில் நடைபெற்றது. அரசு ஒதுக்கீட்டிற்கு காலை 10 மணிக்கும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு பிற்பகல் 2 மணிக்கும் கலந்தாய்வு நடத்தப்பட்டது.

கலந்தாய்வு முடிவுற்ற நிலையில், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு இட ஒதுக்கீட்டில் 35 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 505 இடங்களும் காலியாக உள்ளன. நடப்பு ஆண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் தேர்வாகாதவர்கள் அடுத்த ஆண்டு நீட் தேர்வு எழுதி சேர்வதற்கு திட்டமிட்டுள்ளதும் பல்மருத்துவ படிப்பில் காலி இடங்கள் ஏற்பட்டுள்ளதற்கு காரணமாக கூறப்படுகிறது. மீதமுள்ள இடங்களை, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அந்தந்த தனியார் கல்லூரிகளே, நீட் தேர்வின் அடிப்படையில் நிரப்பிக் கொள்ளலாம் என மருத்துவ கல்வி இயக்குனரக தேர்வு குழு தெரிவித்துள்ளது. அதற்கான தரவரிசைப் பட்டியல் செவ்வாய்கிழமை இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.