​​ செல்வ வரிக்கணக்கு வழக்கில் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளின் விவரங்களை அளிக்க உத்தரவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செல்வ வரிக்கணக்கு வழக்கில் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளின் விவரங்களை அளிக்க உத்தரவு

செல்வ வரிக்கணக்கு வழக்கில் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளின் விவரங்களை அளிக்க உத்தரவு

Sep 10, 2018 8:18 PM

செல்வ வரிக்கணக்கு குறித்த வழக்கில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளின் விவரங்களை அளிக்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

1997-98 ஆம் ஆண்டு 4 கோடியே 67 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாக, ஜெயலலிதா தாக்கல் செய்த கணக்கின் அடிப்படையில், வருமான வரித்துறை 7 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் செல்வ வரி விதித்தது. ஆனால், ஜெயலலிதாவின் வீட்டில் நடந்த சோதனையில், 3 கோடியே 83 லட்சம் ரூபாய் அளவுக்கு தங்கம், வெள்ளி நகைகள் இருப்பதாக வருமான வரித்துறைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில், வருமான வரித்துறை செல்வ வரியை மீண்டும் மதிப்பீடு செய்தது.

இதை எதிர்த்த ஜெயலலிதாவின் மேல்முறையீட்டை விசாரித்த வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம், அவரது சொத்து மதிப்பை மாற்றியமைத்த வருமான வரித்துறையின் உத்தரவை ரத்து செய்தது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் ஹுலுவாடி ஜி.ரமேஷ், கல்யாணசுந்தரம் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகள் யார் யார் ?, அவர் உயில் ஏதும் எழுதி வைத்துள்ளாரா ? என்ற விவரங்களை அளிக்க வருமான வரித்துறைக்கு நீதிபதிகள் ஆணையிட்டனர்.