​​ கோவில்பட்டி அருகே ரயில்வே தண்டவாளத்தில் மின் வயர் துண்டானதால், ரயில் சேவை பாதிப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவில்பட்டி அருகே ரயில்வே தண்டவாளத்தில் மின் வயர் துண்டானதால், ரயில் சேவை பாதிப்பு

கோவில்பட்டி அருகே ரயில்வே தண்டவாளத்தில் மின் வயர் துண்டானதால், ரயில் சேவை பாதிப்பு

Sep 10, 2018 8:14 PM

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ரயில்வே தண்டவாளத்தில் மின் வயர் துண்டானதால், அந்த வழித்தடத்தில் செல்லும் முக்கியமான பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் மாலை இடியுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக நல்லி என்ற இடத்தில் ரயில்வே தண்டவாளத்தின் மீது செல்லும் மின்சார வயர் துண்டானதாகக் கூறப்படுகிறது. இதனால் திருநெல்வேலியில் இருந்து மும்பை தாதர்  வரை செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் மற்றும் ஜம்மு தாவி வரை செல்லும் ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்களும் கோவில்பட்டி ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன.

அதேபோல், தூத்துக்குடியில் இருந்து மைசூர் செல்லும் விரைவு ரயில், குருவாயூர் விரைவு ரயில், கோயம்புத்தூர் நெல்லை பயணிகள் ரயில் உள்ளிட்டவை ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் தென் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு செல்லக் கூடிய அனைத்து ரெயில்களும் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பல மணி நேரமாக ரயில்கள் நிற்பதால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.