​​ பட்டப்பகலில் அதிமுக பிரமுகர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பட்டப்பகலில் அதிமுக பிரமுகர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை

Published : Sep 10, 2018 8:12 PM

பட்டப்பகலில் அதிமுக பிரமுகர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை

Sep 10, 2018 8:12 PM

திருப்பூரில் பட்டப்பகலில் அதிமுக பிரமுகர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் ஸ்ரீநகர் பகுதியில் உணவகம் நடத்தி வந்த அதிமுக பிரமுகரான இளங்கோ, வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்துள்ளார். மாலை NRK புரம் பகுதியில், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக சிலருடன் இளங்கோ வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றவர், மீண்டும் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தபோது மர்ம நபர்கள் சிலர் அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் துடித்த இளங்கோ மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.