​​ பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Published : Sep 10, 2018 8:02 PM

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Sep 10, 2018 8:02 PM

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில், பெட்ரோல்-டீசல் மீதான விலை உயர்வு மக்களை வெகுவாக பாதித்து இருப்பதோடு, விலையேற்றத்தையும் உருவாக்கி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மக்களின் கோபத்தை நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் உணரவைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மத்திய அரசு கலால் வரியை குறைக்க வேண்டுமென்றும் தமிழக அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டுமென்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.