​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கள்ளக்குறிச்சியில் நள்ளிரவில் வீட்டில் தீவிபத்து - தாய் மற்றும் எட்டு மாத ஆண்குழந்தை உயிரிழப்பு

Published : Mar 14, 2018 5:46 PM



கள்ளக்குறிச்சியில் நள்ளிரவில் வீட்டில் தீவிபத்து - தாய் மற்றும் எட்டு மாத ஆண்குழந்தை உயிரிழப்பு

Mar 14, 2018 5:46 PM

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தில் தாய் மற்றும் எட்டுமாத குழந்தை உயிரிழந்தனர்.  கள்ளக்குறிச்சி கிராமச்சாவடி தெருவைச் சேர்ந்த சரவணன் தனது ஐந்து வயது மகளுடன் வீட்டின் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். மற்றொரு அறையில் அவரது மனைவி கனகாவும், எட்டுமாத குழந்தையான சிவச்சந்திரனும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவில் கனகா தூங்கிக்கொண்டிருந்த அறையில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கனகாவும் குழந்தை சிவச்சந்திரனும் படுகாயம் அடைந்தனர். அலறல் சத்தம் கேட்டு வந்த அருகிலிருந்தோர் காயமடைந்த கனகா மற்றும் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் கொண்டு செல்லப்பட்ட அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

சரவணன் லேசான தீக்காயங்களுடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தகவலறிந்து சென்ற போலீசார் தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.