​​ பாரத் பந்த்..! தமிழகத்தில் பாதிப்பில்லை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாரத் பந்த்..! தமிழகத்தில் பாதிப்பில்லை

Published : Sep 10, 2018 6:40 PM

பாரத் பந்த்..! தமிழகத்தில் பாதிப்பில்லை

Sep 10, 2018 6:40 PM

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட முழு அடைப்பு போராட்டத்தால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பெரும்பலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன,போக்குவரத்து சேவைகள் வழக்கம் போல இயங்கியதால் இயல்புக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. 

சென்னை மாநகரில் பெரும்பாலான மளிகைக்கடைகள், டீக்கடைகள்  என அனைத்தும் வழக்கம்போல் திறந்திருந்தன. அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. 

காஞ்சிபுரம் மாவட்டத்திலும் சுமார் 90 சதவீதம் கடைகள், உணவகங்கள் திறந்திருந்தன. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகள் மட்டும் நிறுத்திவைக்கப்பட்டன. அதேபோல், திருப்பதிக்கும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

சேலம் மாநகரிலும், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி, பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆட்டோக்களும் வழக்கம்போல் ஓடிய நிலையில், கடைகள் திறந்திருந்தன. 

திருச்சியில்  இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காந்தி மார்க்கெட்டில் இருந்து பாஸ்போர்ட் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை  காவல்துறையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், அவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கி வேனில் ஏற்றப்பட்டனர். 

நாகர்கோவிலில் திறந்திருந்த கடைகளை மூடச் சொல்லி திமுகவினர் வற்புறுத்தினர். அப்போது கடையில் இருந்த பொருட்களை சாலையில் தூக்கி வீசியதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் திமுகவினரை தடுத்தனர். இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடையை மூடச் சொல்லிய காங்கிரஸ் கட்சியினருக்கும் , அதற்கு மறுப்பு தெரிவித்த வணிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் ஏற்படும் சூழல் உருவானதை அடுத்து போலீசார் சமாதானம் செய்தனர். 

புதுச்சேரி பொம்மையார் பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி பேருந்து மாணவர்களை ஏற்றிக் கொண்டு முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே வந்தது. அப்போது பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் காங்கிரசார் பேரணியாக வந்தனர்.

பேரணியில் வந்த சிலர் பேருந்தின் மீது கற்களை வீசினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் 13 பேரைக் கைது செய்தனர். இதேபோல் நெல்லித்தோப்பு சிக்னல் அருகே
தமிழக அரசுப் பேருந்து ஒன்றும், புதுச்சேரி அரசுப் பேருந்து ஒன்றும் தாக்கப்பட்டன.