​​ வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரிக்கு எதிராக கைதாணை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரிக்கு எதிராக கைதாணை

வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரிக்கு எதிராக கைதாணை

Sep 10, 2018 6:07 PM

வைர வியாபாரி நீரவ் மோடியின் சகோதரிக்கு எதிராக சர்வதேச காவல்துறை கைதாணை பிறப்பித்துள்ளது. பஞ்சாப் நேசனல் வங்கியில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த நீரவ் மோடி வெளிநாடு தப்பிச் சென்று விட்டார்.

இந்த வழக்கில் நீரவ் மோடியின் சகோதரி பூர்வி தீபக் மோடியின் மீதும் குற்றச்சாட்டு உள்ளது. சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள போலி நிறுவனங்கள் மற்றும் முதலீடுகளை ஈர்க்கும் நிறுவனங்களை நிர்வகித்து வந்தவர் பூர்வி மோடி என குற்றம்சாட்டிய அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள், அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். ஆனால் சம்மன்களுக்கு அவர் பதிலளிக்கவில்லை. இந்த நிலையில், அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று, அவரைக் கைது செய்ய சர்வதேச காவல்துறை ஆணை பிறப்பித்துள்ளது.