​​ போக்சோ சட்டத்தின் கீழ் கைதான நபர், கே.வி.பள்ளி தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போக்சோ சட்டத்தின் கீழ் கைதான நபர், கே.வி.பள்ளி தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு

Published : Sep 10, 2018 6:06 PMபோக்சோ சட்டத்தின் கீழ் கைதான நபர், கே.வி.பள்ளி தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு

Sep 10, 2018 6:06 PM

பெங்களூரில் போக்சோ சட்டத்தின்கீழ் கைதான நபர், திருவண்ணாமலை கேந்திரிய வித்யாலயா பள்ளி தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், அவரை விடுவித்து திருவண்ணாமலை ஆட்சியர் ஆணையிட்டுள்ளார்.

பெங்களூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த குமார் தாக்கூர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் கைதானார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், குமார் தாக்கூர் திருவண்ணாமலை கனந்தபூண்டியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி தலைமையாசிரியராக அண்மையில் நியமிக்கப்பட்டார்.

இதனால் அங்கு பயிலும் மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். குமார் தாக்கூரை மாற்ற வேண்டுமென வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, குமார் தாக்கூரை திருவண்ணாமலையிலிருந்து விடுவித்து ஆணை பிறப்பித்தார்.