​​ ஹெரால்டு பத்திரிகை வழக்கு: ராகுல், சோனியாவின் மனுக்களை தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஹெரால்டு பத்திரிகை வழக்கு: ராகுல், சோனியாவின் மனுக்களை தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம்

Published : Sep 10, 2018 6:00 PM

ஹெரால்டு பத்திரிகை வழக்கு: ராகுல், சோனியாவின் மனுக்களை தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம்

Sep 10, 2018 6:00 PM

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மற்றும் சோனியா காந்தி ஆகியோர் தங்களது 2011 - 12-ஆம் ஆண்டு வருமான வரிக்கணக்கை வருமான வரித்துறை மீண்டும் ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ராகுல் சோனியா ஆகியோர் முக்கிய பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்திவரும் அசோசியேட் ஜர்னல் நிறுவனத்துக்கு அளித்த 50 லட்சம் ரூபாய் கடனுக்குப் பதிலாக அந்த நிறுவனத்தின் 90 கோடி ரூபாய் சொத்துக்களை அபகரித்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பான வழக்கில் ராகுல் சோனியா உள்ளிட்டோரின்  2011 - 12-ஆம் ஆண்டு வருமான வரிக்கணக்கை மறு ஆய்வு செய்ய வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிரான ராகுல், சோனியா உள்ளிட்டோரின் மனுக்களை விசாரித்து வந்த டெல்லி உயர்நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது.