​​ கமல்ஹாசனுடன் ஸ்வராஜ் அபியான் கட்சித் தலைவர் யோகேந்திர யாதவ் சந்திப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கமல்ஹாசனுடன் ஸ்வராஜ் அபியான் கட்சித் தலைவர் யோகேந்திர யாதவ் சந்திப்பு

Published : Sep 10, 2018 5:26 PM

கமல்ஹாசனுடன் ஸ்வராஜ் அபியான் கட்சித் தலைவர் யோகேந்திர யாதவ் சந்திப்பு

Sep 10, 2018 5:26 PM

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை, ஸ்வராஜ் அபியான் கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் சந்தித்துப் பேசினார்.

இந்திய அளவில் விவசாயிகளை ஒன்றிணைக்க, அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழுவை கட்டமைத்திருப்பவர் யோகேந்திர யாதவ். இவர், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகத்தில் கமல்ஹாசனை சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யோகேந்திர யாதவ், கமல்ஹாசனுடன் அரசியல் பேசவில்லை என்று தெரிவித்தார். விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென கமல்ஹாசனிடம் வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.