​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உ.பி. மக்களவை இடைத்தேர்தல் முடிவுகள் - பா.ஜ.க.வுக்கு பின்னடைவு

Published : Mar 14, 2018 5:39 PM



உ.பி. மக்களவை இடைத்தேர்தல் முடிவுகள் - பா.ஜ.க.வுக்கு பின்னடைவு

Mar 14, 2018 5:39 PM

உத்தரப்பிரதேச மாநில மக்களவை இடைத் தேர்தலில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வசம் இருந்த கோரக்பூர் மற்றும் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா வசம் இருந்த புல்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பா.ஜ.கவை பின்னுக்குத் தள்ளி சமாஜ்வாதி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. 

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர், புல்பூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளின் எம்.பி.க்களாக இருந்த யோகி ஆதித்யநாத், கேசவ்பிரசாத் மவுரியா ஆகியோர் மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றதைத் தொடர்ந்து எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் இந்தத் தொகுதிகள் காலியாக இருந்தன. இந்தத் தொகுதிகளுக்கும் பீகாரில் காலியாக இருந்த அரேரியா மக்களவைத் தொகுதி மற்றும் ஜகனாபாத், பஹாபூவா சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த 11-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி உத்தரப்பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் மற்றும் புல்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் சமாஜ்வாதி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பீகார் மாநிலம் அரேரியா தொகுதியில் பா.ஜ.க முன்னிலை வகித்து வருகிறது. பீகாரின் பஹபூவா சட்டப்பேரவைத் தொகுதியில் பா.ஜ.கவும், ஜகனாபாத் சட்டப்பேரவைத் தொகுதியில் ராஷ்ட்ரீய ஜனதாதளமும் முன்னிலை வகித்து வருகின்றன.