​​ புதிய பிரதமர் ஸ்காட் மாரிசனுக்கு எதிராக வளரும் அதிருப்தி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதிய பிரதமர் ஸ்காட் மாரிசனுக்கு எதிராக வளரும் அதிருப்தி

புதிய பிரதமர் ஸ்காட் மாரிசனுக்கு எதிராக வளரும் அதிருப்தி

Sep 10, 2018 5:22 PM

ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிசன் ((Scott Morrison)) நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருந்தாலும் அவருக்கு எதிரான அதிருப்தி வளர்ந்து வருகிறது.

ஆஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சியில் உட்கட்சிப் பூசல் காரணமாக அடிக்கடி பிரதமர்கள் மாறி வருகின்றனர். கடந்த 3 ஆண்டு காலமாக பிரதமராக இருந்த மால்கம் டர்ன்புல்லுக்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அவர் பதவி விலகினார். அதையடுத்து நடைபெற்ற ஓட்டெடுப்பில் ஸ்காட் மாரிசன்  வெற்றிபெற்று பிரதமரானார்.

எனினும் ஸ்காட் மாரிசனுக்கும் கட்சியில் எதிர்ப்பு நிலவிவருகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆளும்கட்சியில் உட்கட்சிப் பூசலால் பிரதமர் மாறியிருப்பது, வரும் தேர்தலில் மக்கள் ஆதரவைப் பெறுவதில் பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.