​​ நாகர்கோவிலில் கடைகளை அடைக்கச் சொல்லிய திமுகவினர், போலீசார் இடையே வாக்குவாதம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாகர்கோவிலில் கடைகளை அடைக்கச் சொல்லிய திமுகவினர், போலீசார் இடையே வாக்குவாதம்

Published : Sep 10, 2018 5:05 PM



நாகர்கோவிலில் கடைகளை அடைக்கச் சொல்லிய திமுகவினர், போலீசார் இடையே வாக்குவாதம்

Sep 10, 2018 5:05 PM

நாகர்கோவிலில் கடைகளை அடைக்கச் சொல்லிய திமுகவினருக்கும், அதை தடுக்க வந்த போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக முழு அடைப்பு நடைபெற்று வரும் நிலையில், நாகர்கோவிலில் திறந்திருந்த கடைகளை மூடச் சொல்லி திமுகவினர் வற்புறுத்தினர். அப்போது கடையில் இருந்த பொருட்களை சாலையில் தூக்கி வீசியதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் திமுகவினரை தடுத்தனர். இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடையை மூடச் சொல்லிய வணிகர்களுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதை அடுத்து போலீசார் சமாதானம் செய்து வைத்தனர்.