​​ கோபக்கார செரினா வில்லியம்சுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோபக்கார செரினா வில்லியம்சுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

கோபக்கார செரினா வில்லியம்சுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

Sep 10, 2018 4:58 PM

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் நடுவரை திட்டித் தீர்த்த, செரினா வில்லியம்சுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் நடந்த அந்தப் போட்டியில், ஜப்பான் வீராங்கனையிடம் செரினா வில்லியம்ஸ் தோல்வியுற்றார். அந்த அதிருப்தியில், ஜப்பான் வீராங்கனையுடன் கைகுலுக்க மறுத்தத அவர்,, நடுவரை திருடன் என்று திட்டித் தீர்த்தார். டென்னிஸ் ராக்கெட்டை தரையில் அடித்து உடைத்தார். திறமையான வீராங்கனை, கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நடுவரை திட்டியது, டென்னிஸ் ராக்கெட்டை உடைத்தது, விதிமுறைகளை மீறியது போன்ற குற்றங்களுக்காக, அமெரிக்க டென்னிஸ் சங்கம் ((US Tennis Association)) செரினா வில்லியம்சுக்கு இந்திய மதிப்பில் 12 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. இதனிடையே, செரினா வில்லியம்சுக்கு பெண்கள் டென்னிஸ் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது.