​​ போக்சோ சட்டத்தில் கைதானவர் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போக்சோ சட்டத்தில் கைதானவர் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு

Published : Sep 10, 2018 4:50 PM

போக்சோ சட்டத்தில் கைதானவர் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு

Sep 10, 2018 4:50 PM

பெங்களூருவில் பணியாற்றியபோது போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஒருவர், திருவண்ணாமலையிலுள்ள பள்ளிக்கு தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

திருவண்ணாமலையை அடுத்த கனந்தபூண்டியில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு பெங்களூருவைச் சேர்ந்த குமார் தாக்கூர் என்பவர் கடந்த மாதம் 13 ஆம் தேதி தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டார். இவர் பெங்களூருவில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தலைமையாசிரியாக பணியாற்றியபோது, மாணவிகளிடமும், அங்குள்ள பெண் ஆசிரியர்களிடமும் தவறாக நடந்துகொண்டார் என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டு, போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், கடந்த மாதம் திருவண்ணாமலை பள்ளிக்கு தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பெற்றோர்கள், குமார் தாக்கூரை மாற்றவேண்டுமெனவும், இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளனர்.