​​ போக்குவரத்து காவலரை அடித்து உதைத்த குடிபோதை ஆசாமிகள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போக்குவரத்து காவலரை அடித்து உதைத்த குடிபோதை ஆசாமிகள்


போக்குவரத்து காவலரை அடித்து உதைத்த குடிபோதை ஆசாமிகள்

Sep 10, 2018 4:23 PM

சென்னையில் போக்குவரத்து காவலர் ஒருவரை இருசக்கர வாகனத்தில் வந்த குடிபோதை ஆசாமிகள் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்து காவலரான பிரகாஷ் ஆளுநர் மாளிகை அருகே பார்க் ஹயாத் நட்சத்திர ஓட்டல் சிக்னல் அருகே வழக்கம்போல பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார் குறித்த கிடைத்த தகவலின்பேரில், சம்பந்தப்பட்ட காரை அவர் தடுத்து நிறுத்தினார்.

அந்தக் காரின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த குடிபோதை ஆசாமிகள் இருவர், காவலர் பிரகாஷ் தங்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தவறாக எண்ணி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சக வாகன ஓட்டிகள் அவர்களை தடுத்தபோதும், குடிபோதை ஆசாமிகள் இருவரும், பிரகாஷை கண்மூடித்தனமாக அடித்து உதைத்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் காவலர் பிரகாஷின் சீருடையையும் கிழித்த அவர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றனர். சம்பவம் குறித்து பிரகாஷ் அளித்த புகாரின் அடிப்படையில் கிண்டி போலீசார் குடிபோதை ஆசாமிகள் இருவரை தேடி வருகின்றனர்.