​​ டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு... இந்திய பங்குச்சந்தைகளும் கடும் சரிவு..
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு... இந்திய பங்குச்சந்தைகளும் கடும் சரிவு..

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு... இந்திய பங்குச்சந்தைகளும் கடும் சரிவு..

Sep 10, 2018 4:19 PM

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், ரூபாய் மதிப்பும் வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 467 புள்ளிகள் சரிந்து 37 ஆயிரத்து 922 புள்ளிகளாக குறைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 151 புள்ளிகள் சரிந்து 11 ஆயிரத்து 438 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்தது. அமெரிக்கா- சீனா இடையே தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போர், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் வரலாறு காணாத வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆசிய பங்குசந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி உள்ளிட்ட காரணிகளால் சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சில நாட்களுக்கு சந்தையில் சரிவு நீடிக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். நிப்டி கணக்கிடப்படும் 50 நிறுவன பங்குகளில், பஜாஜ் பைனான்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட 41 நிறுவனங்களின் பங்கு விலை சரிவடைந்தது. ஹெச்.சி.எல் டென்னாலஜிஸ், விப்ரோ, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலை உயர்வடைந்தது.  நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 80 கோடி டாலர் உயர்ந்து முதல் காலாண்டில் 1580 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ரிசர்வ் வங்கி வெளியட்ட இந்த புள்ளி விவரமும் சந்தையில் தாக்கத்தை எற்படுத்தி உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65 காசுகள் சரிந்து 72 ரூபாய் 39 காசுகளாக இருக்கிறது.