​​ பேச்சுவார்த்தை இன்றியே இருதரப்பு உறவை மேம்படுத்தும் இந்தியா-தைவான்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேச்சுவார்த்தை இன்றியே இருதரப்பு உறவை மேம்படுத்தும் இந்தியா-தைவான்

பேச்சுவார்த்தை இன்றியே இருதரப்பு உறவை மேம்படுத்தும் இந்தியா-தைவான்

Sep 10, 2018 4:15 PM

இந்தியாவும் சீனாவும் முறையான பேச்சுவார்த்தைகள் இன்றியே, இருதரப்பு கலாச்சாரம் மற்றும் வர்த்தக உறவுகளை பகிர்ந்துகொள்ள முயற்சிகள் மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தைவானை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, தைவானை தனி நாடாக கருதக்கூடாது என்றும், சீனாவின் ஒரு பகுதியாக கருதி, சைனீஸ் தைபே என கூற வேண்டும் என வலியுறுத்தியது. சீனாவின் இந்த கோரிக்கையை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஏற்றுக் கொண்ட நிலையில், டெல்லியில் அடுத்தவாரம் தைவான் திரைப்பட விழா நடைபெறவுள்ளது.

இதில், உலக அளவில் பல்வேறு விருதுகளைப் பெற்ற தைவான் திரைப்படங்கள், திரையிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, தைவானைச் சேர்ந்த 25 இளைஞர்கள், கடந்த வாரம் இந்தியா வந்து சென்றதை அடுத்து, தற்போது திரைப்பட விழா நடைபெறுகிறது.