​​ 2019 - அமெரிக்க அழகிப் பட்டத்தைச் தட்டிச் சென்ற கருப்பின பெண்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2019 - அமெரிக்க அழகிப் பட்டத்தைச் தட்டிச் சென்ற கருப்பின பெண்

2019 - அமெரிக்க அழகிப் பட்டத்தைச் தட்டிச் சென்ற கருப்பின பெண்

Sep 10, 2018 4:06 PM

2019 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க அழகியாக நியா பிராங்ளின் (Nia Franklin) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் அமைந்துள்ள அட்லாண்டிக் நகரில் , நடைபெற்ற அழகிப் போட்டியில் 50 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். இதில் 2019 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிய பிராங்ளினுக்கு, நடப்பு ஆண்டின் அழகியான காரா மன்ட் (Cara Mund) கிரீடம் சூட்டினார்.

அமெரிக்க அழகிப் பட்டத்தை தட்டிச்சென்றுள்ள 25 வயதான கருப்பின பெண்ணான நியா பிராங்ளின் இறுதி சுற்றில், கல்வியில் அனைவருக்கும் சமவாய்ப்பு வேண்டுமென்று கூறி முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.