​​ பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் : மன்மோகன்சிங்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் : மன்மோகன்சிங்

பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் : மன்மோகன்சிங்

Sep 10, 2018 4:02 PM

பெட்ரோல், டீசல் விலைக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

எரிபொருள் விலை கட்டுப்படுத்துவதிலும், 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதில் மோடி அரசு தோல்வி அடைந்து விட்டது  என்று அவர் சாடினார். விவசாயிகள், தொழிலதிபர்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் பிரச்சினைகளை எதிர்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். மத்தியில் இருந்து பாஜகவை அகற்றும் நேரம் வந்து விட்டது என்றும், இது விரைவில் நடக்கும் என்றும் மன்மோகன்சிங் தெரிவித்தார்.