​​ சேலம், தனியார் மருத்துவமனையில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் மருத்துவர்களும், நோயாளிகளும் அச்சம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சேலம், தனியார் மருத்துவமனையில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் மருத்துவர்களும், நோயாளிகளும் அச்சம்

Published : Sep 10, 2018 3:59 PMசேலம், தனியார் மருத்துவமனையில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் மருத்துவர்களும், நோயாளிகளும் அச்சம்

Sep 10, 2018 3:59 PM

சேலத்தில் தனியார் மருத்துவமனையில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் மருத்துவர்களும், நோயாளிகளும் அச்சமடைந்தனர்.

புதிய பேருந்து நிலையம் அருகே  பிருந்தாவன் சாலையில் உள்ள ஏகா மருத்துவமனையில், இன்று மதியம் தலைமை மருத்துவர் பிரபாகரன் நோயாளிகளை பரிசோதித்து கொண்டிருந்தார். அப்போது, ஏ.சி.யை போட்டபோது, அதில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைக் கண்ட மருத்துவரும், நோயாளிகளும் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர். மருத்துவமனையிலிருந்த தீ தடுப்பு சாதனங்களைக் கொண்டு நெருப்பை அணைக்க ஊழியர்கள் முயன்றனர்.

இதைத் தொடர்ந்து, அங்கு வந்த செவ்வாய்ப்பேட்டை தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இதனிடையே, மருத்துவமனையில் உள்நோயாளிகள் 14 பேர், ஆம்புலன்ஸ் மூலம் வேறொரு மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.