​​ முக்கியப் பிரச்சினைகளில் பிரதமர் மவுனம் காக்கிறார் - ராகுல்காந்தி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முக்கியப் பிரச்சினைகளில் பிரதமர் மவுனம் காக்கிறார் - ராகுல்காந்தி

முக்கியப் பிரச்சினைகளில் பிரதமர் மவுனம் காக்கிறார் - ராகுல்காந்தி

Sep 10, 2018 3:58 PM

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய ராகுல்காந்தி முக்கிய பிரச்சினைகளில் பிரதமர் மோடி மவுனம் காப்பதாக குற்றம்சாட்டினார்.

பாஜகவின் 4 ஆண்டு கால ஆட்சி காங்கிரசின் 70 ஆண்டுகால ஆட்சியை விட சிறப்பானது என்று மோடி பேசியதை சுட்டிக்காட்டிய ராகுல்காந்தி, பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிந்துள்ளதால் பிரதமர் கூறியது சரிதான் என்று கேலி செய்தார்.

நாடு பிளவுபட்ட நிலையில் இருப்பதாகவும், இளைஞர்கள் சோர்ந்து போய் இருப்பதாகவும் ராகுல் கூறினார். எரிபொருள் விலை உயர்வு, ரஃபேல் ஒப்பந்தம் குறித்து மோடி பேசாமல் இருப்பது ஏன் என்றும் ராகுல் கேள்வி எழுப்பினார்.