​​ ஓரினச்சேர்க்கை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக முழக்கமிட்ட கிறிஸ்துவ மதபோதகர்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஓரினச்சேர்க்கை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக முழக்கமிட்ட கிறிஸ்துவ மதபோதகர்

Published : Sep 10, 2018 3:26 PM

ஓரினச்சேர்க்கை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக முழக்கமிட்ட கிறிஸ்துவ மதபோதகர்

Sep 10, 2018 3:26 PM

கோவையில், ஓரினச்சேர்க்கை குற்றமாகாது என்று சமீபத்தில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிராக முழக்கமிட்ட கிறிஸ்தவ மதபோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற வளாகத்தில் நுழைந்த ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகரான பெலிக்ஸ் ஜெபசிங் என்பவர் ஓரினச்சேர்க்கை தவறானது அல்ல என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு தவறானது என்றும், இதனால் சமுதாயம் சீரழியும் எனவும் கூறி முழக்கமிட்டார்.

இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், விரைந்துவந்த பந்தையசாலை காவல்துறையினர், பெலிக்ஸ் ஜெபசிங்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.