​​ இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

Sep 10, 2018 3:22 PM

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவுநாளை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பரமக்குடி சந்தைப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் நாளை அவரது 61வது நினைவுதினம் அனுசரிக்கப்படவுள்ளது. தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம் சார்பில் நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் அங்கு வருகை தரவுள்ளனர்.

இதனையொட்டி காவல்துறையினர் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ஹெலிகேம் மூலம் பதற்றத்துக்குரிய பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அப்பகுதியைச் சுற்றி 75 முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.