​​ செகந்திராபாத்தில் இருந்து சென்னை வந்த ரயில் பயணியிடம் ரூ. 29 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செகந்திராபாத்தில் இருந்து சென்னை வந்த ரயில் பயணியிடம் ரூ. 29 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை

செகந்திராபாத்தில் இருந்து சென்னை வந்த ரயில் பயணியிடம் ரூ. 29 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை

Sep 10, 2018 3:12 PM

செகந்திராபாத்தில் இருந்து சென்னை வந்த ரயில் பயணியிடம் சுமார் 29 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

சென்னை ஆவடியைச் சேர்ந்த கோமளா என்பவர் தனது கணவர் பிரபு குமாருடன் நேற்று செகந்திராபாத்தில் இருந்து சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை வந்தார். இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஓங்கோல் ரயில் நிலையத்தைக் கடந்த போது கோமளா தனது உடைமைகளை சரிபார்த்ததாகவும், அப்போது நகைப்பையைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.

சென்னை வந்த பின் இது தொடர்பாக கோமளா ரயில்வே காவல் துறையில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார், வழக்கை ஓங்கோல் ரயில்வே காவல்துறைக்கு மாற்றியுள்ளனர்.