​​ இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவ முடிவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவ முடிவு

Published : Jan 23, 2018 11:03 AM

இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவ முடிவு

Jan 23, 2018 11:03 AM

11 ஆயிரம் ரயில்கள் மற்றும் 8 ஆயிரத்து 500 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க ரயில்வே பட்ஜெட்டில் 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 12 லட்சம் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் இனி குறைந்தபட்சம் எட்டு கேமராக்கள் பொருத்தப்படும். அனைத்து மெயில், எக்ஸ்பிரஸ், சொகுசு ரயில்களிலும் நவீன கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்பட உள்ளன.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தப் பணிகள் நிறைவேற்றப்படும் என்று ரயில்வேத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.