​​ முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழக அரசின் புதிய தகவல் தொழில் நுட்பவியல் கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழக அரசின் புதிய தகவல் தொழில் நுட்பவியல் கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழக அரசின் புதிய தகவல் தொழில் நுட்பவியல் கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Sep 10, 2018 3:00 PM

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கும் வகையில் புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். 

பொறியியல் பட்டதாரிகளின் செயல்திறன் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துதல் தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

முன்னணி தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்புகளின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் போது புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இறுதியாக 2008ஆம் ஆண்டு கொள்கைகள் மாற்றி அமைக்கப்பட்ட நிலையில், தற்போது புதிதாக வெளியிடப்பட்டுள்ள கொள்கையில், பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

வணிக நுண்ணறிவு மென்பொருள் மற்றும் பகுப்பாய்வு, தரவு கிடங்கு, கணினி தமிழ், தரவு மையம், கேமிங் மற்றும் அனிமேசன் ஆகியவற்றில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பி,சி பிரிவு மாவட்டங்களில் உள்ள நிறுவனங்களின் விரிவாக்கம் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு நிபந்தனைகளின் கீழ் நிதியுதவி, சிறிய நிறுவனங்கள், பெரிய நிறுவனங்களுடன் சேர்ந்து பணியாற்ற உதவி ஆகிய அம்சங்களும் புதிது.

வேலை வாய்ப்பினை பெருக்கும் பொருட்டு, வழங்கப்படும் வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப மூலதன மானியம் உள்ளிட்ட சிறப்பு சலுகைகள். இரவுப் பணியில் உள்ள பெண்களுக்கு போக்குவரத்து வசதி, உரிய பாதுகாப்பு, தங்கும்வசதி, ஓய்வெடுக்கும் வசதி செய்து கொடுத்தல். பாலியல் கொடுமைகளைக் களைய குழு அமைத்தல் உள்ளிட்ட அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.