​​ பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து ராமேஸ்வரம், பாம்பன் பகுதி மீனவர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து ராமேஸ்வரம், பாம்பன் பகுதி மீனவர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து ராமேஸ்வரம், பாம்பன் பகுதி மீனவர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம்

Sep 10, 2018 2:10 PM

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பகுதி மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் கரைகளிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

 கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதி மீனவர்கள் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை கரையிலேயே நிறுத்தி, எதிர்கட்சிகளின் போராட்டத்துக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

 தூத்துக்குடி மீனவர்கள் தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லாமல் 250க்கும் மேற்பட்ட தங்களது படகுகளை மீன்பிடித்துறைமுகக் கரையிலேயே நிறுத்திவைத்துள்ளனர்.