​​ பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை

பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை

Sep 10, 2018 1:50 PM

பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பை மேம்படுத்துவது குறித்து முன்னணி தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

முன்னணி தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்புகளின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். பொறியியல் பட்டதாரிகளின் செயல் திறன் மற்றும் வேலைவாய்ப்புகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.