​​ ஆளில்லா கடவுப் பாதையை கடக்க முயன்ற JCB மீது ரயில் மோதி விபத்து
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆளில்லா கடவுப் பாதையை கடக்க முயன்ற JCB மீது ரயில் மோதி விபத்து

ஆளில்லா கடவுப் பாதையை கடக்க முயன்ற JCB மீது ரயில் மோதி விபத்து

Sep 10, 2018 1:19 PM

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆளில்லா கடவுப் பாதையை கடக்க முயன்ற ஜே.சி.பி., மீது ரயில் மோதியதில் அதிர்ஷ்டவசமாக இருவர் உயிர் தப்பினர்.

ராமப்பட்டினம் புதூரைச் சேர்ந்த ஹரீஸ் என்பவர், காதில் ஹெட் செட் மாட்டிய படி ஜே.சி.பி.யை இயக்கியதாகக் கூறப்படுகிறது. சத்திரப்பட்டி அருகே ஆளில்லா ரயில்வே கடவுப் பாதையை கடக்க முயன்ற போது, அவ்வழியாக வந்த அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ஜே.சி.பி. மீது மோதியது. இதில் ஜே.சி.பி. கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஓட்டுநர் ஹரீஷ் மற்றும் உடன் இருந்த ராஜூ ஆகிய இருவர் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினர். ரயில் ஒருமணி நேரம் தாமதமாக புறப்பட்டது.ஜே.சி.பி. மீது மோதியதால் ரயில் எஞ்சினில் லேசான கோளாறு ஏற்பட்டது. ஒன்றரை மணி நேர தாமதத்திற்குப் பின் ரயில் புறப்பட்டுச் சென்றது.