​​ திருச்சியில், சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருச்சியில், சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

திருச்சியில், சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

Sep 10, 2018 12:42 PM

திருச்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.

image

பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் எதிர்கட்சிகள் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து பாஸ்போர்ட் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டவர்களை காவல்துறையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், அவர்கள் கைது செய்யப்பட்டு குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வேனில் ஏற்றப்பட்டனர்.