​​ பிரபல தாதா நாகேந்திரனின் தம்பியும், ரவுடியுமான முருகன் கைது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரபல தாதா நாகேந்திரனின் தம்பியும், ரவுடியுமான முருகன் கைது

பிரபல தாதா நாகேந்திரனின் தம்பியும், ரவுடியுமான முருகன் கைது

Sep 10, 2018 11:53 AM

சென்னை வியாசர்பாடியில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக பிரபல ரவுடி முருகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

வடசென்னையை கலக்கி வந்த பிரபல தாதாவான நாகேந்திரன் ஆயுள் தண்டனை பெற்று, தற்போது சென்னை தனியார் மருத்துவமனையில் 3 மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறான். அவனது தம்பியும், பிரபல ரவுடியுமான முருகன் மீது கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் உள்ளிட்டட 20க்கும் மேற்பட்ட வழக்குகள், வியாசர்பாடி, கொடுங்கையூர், புளியந்தோப்பு உள்ளிட்ட காவல் நிலையங்களில் உள்ளன.

சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி முருகன், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, ரவுடி முருகனை கைது செய்த போலீசார், மீண்டும் அவனை சிறையில் அடைத்தனர்.