​​ ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள், ஜெயலலிதாவின் தனி செயலர் ராமலிங்கம் ஆஜர்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள், ஜெயலலிதாவின் தனி செயலர் ராமலிங்கம் ஆஜர்

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள், ஜெயலலிதாவின் தனி செயலர் ராமலிங்கம் ஆஜர்

Sep 10, 2018 11:25 AM

சென்னையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், அப்போலோ மருத்துவமனையின் பிசியோதெரபிஸ்ட் மற்றும் இதய நோய் சிறப்பு மருத்துவர் உள்பட 3 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனையின் இதய நோய் சிறப்பு மருத்துவர் சாய் சதீசுக்கு கடந்த 6ஆம் தேதியே ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அவர் ஆஜராகததால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆறுமுகசாமி ஆணையம் எச்சரிக்கை விடுத்ததுடன், இன்று முதல் வரும் 12ஆம் தேதி வரை ஆஜராகுமாறு 6 அப்போலோ மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பியது.

இதையடுத்து, இன்று காலையில் அப்போலோ மருத்துவமனையின் இதய நோய் சிறப்பு மருத்துவர் சாய் சதீஷ், பிசியோதெரபிஸ்ட் ராஜ்பிரசன்னா ஆகியோர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகினர். அவர்களிடம், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோல், ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கமும் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக வெளியிடப்பட்ட அப்பல்லோ மருத்துவமனை அறிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசுதான் வெளியிட்டது என ஜெயலலிதாவின் தனி செயலராக இருந்த ராமலிங்கம் விசாரணை ஆணையத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர் மஹிபுனா பாஷா தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், அப்போலோ மருத்துவமனையின் பிசியோதெரபிஸ்ட் மற்றும் இதய நோய் சிறப்பு மருத்துவர் உள்பட 3 பேரிடம் விசாரணை நடைபெற்றது. ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கத்திடமும் விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர் மஹிபுனா பாஷா, மருத்துவ அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள விபரங்கள் அப்பல்லோ கூறியபடி வெளியிடப்பட்டதா இல்லையா என்பதுபற்றி அடுத்த வாரம் நடைபெறவுள்ள விசாரணையில் தெரியவரும் என்றார்.