​​ தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு தொடக்கம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு தொடக்கம்

தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு தொடக்கம்

Sep 10, 2018 10:51 AM

தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள BDS படிப்புக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வில், அரசு ஒதுக்கீட்டில் 264 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 569 இடங்களும் நிரப்பப்படாமல் இருந்தன. இந்த நிலையில் இறுதிக்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது.

இந்த இடங்களில் சேர இதுவரை விண்ணப்பிக்காதோரும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதன்படி 207 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். அரசு ஒதுக்கீட்டிற்கு காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடங்கியது. நிர்வாக ஒதுக்கீட்டுக்கு பிற்பகல் 2 மணிக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.