​​ பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கண்டித்து டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் போராட்டம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கண்டித்து டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் போராட்டம்

Published : Sep 10, 2018 10:01 AM

பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கண்டித்து டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் போராட்டம்

Sep 10, 2018 10:01 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக உயர்த்தப்படுவதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி இன்று நாடு தழுவிய முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்தது. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரவேண்டும் என்றும் வலியுறுத்தி காங்கிரஸ் இந்த போராட்டத்தை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் 21 கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும், சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் அக்கட்சி கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் காலை 9 மணி முதலும், மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் காலை 6 மணி முதலும் ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், டெல்லி ராஜ்காட்டில் காந்தி நினைவிடத்தில் இன்று காலை 8.30 மணியளவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து டெல்லி ராம்லீலா மைதானத்தை நோக்கி ராகுல்காந்தி பேரணியைத் தொடங்கினார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பதாகைகளை ஏந்தியபடி திரளானோர் இந்த பேரணியில் பங்கேற்றனர்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். சரத்பவார், சரத்யாதவ், டிகேஎஸ் இளங்கோவன், சோம்நாத் பாரதி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.