​​ பாரீசில் முன்பின் தெரியாதவர்களை கத்தியால் குத்திய நபர் கைது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாரீசில் முன்பின் தெரியாதவர்களை கத்தியால் குத்திய நபர் கைது

பாரீசில் முன்பின் தெரியாதவர்களை கத்தியால் குத்திய நபர் கைது

Sep 10, 2018 7:55 AM

பிரான்ஸ் தலைநகரான பாரீசில் கத்தியுடன் பாய்ந்த ஒருவன் வெறித்தனமாக முன்பின் தெரியாத ஏழு பேரை குத்தி ரத்த வெள்ளத்தில் சாய்த்தான்.

படுகாயமடைந்த அந்த ஏழு பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர். ஆனால் அவன் தீவிரவாதி அல்ல என்றும் மன நலம் பாதிக்கப்பட்டவனாக இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.