​​ டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 154 ரன்கள் முன்னிலை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 154 ரன்கள் முன்னிலை

Published : Sep 10, 2018 7:37 AM

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 154 ரன்கள் முன்னிலை

Sep 10, 2018 7:37 AM

இந்தியாவிற்கு எதிரான 5வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், 154 ரன்கள் முன்னிலை பெற்று இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்து, முதல் இன்னிங்சில் 332 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரன் எடுக்க முடியாமல் திணறினர். கோலி 49 ரன்களிலும், ஹனுமா விஹாரி 56 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணியால் முதல் இன்னிங்சில் 292 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஜடேஜா 86 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

இதையடுத்து இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ளது. குக் 46 ரன்களுடனும், ஜோ ரூட் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.