​​ நீலகிரியில் அழிந்து வரும் அரிய வகை லங்கூர் குரங்குகள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீலகிரியில் அழிந்து வரும் அரிய வகை லங்கூர் குரங்குகள்

நீலகிரியில் அழிந்து வரும் அரிய வகை லங்கூர் குரங்குகள்

Sep 10, 2018 7:35 AM

நீலகிரி மாவட்டங்களில் மரங்களில் மட்டும் வாழக்கூடிய லங்கூர் வகை குரங்குகளுக்கு ஆபத்து நேரிட்டுள்ளது. மாவட்டத்தில் மரங்கள் வெட்டப்பட்டு வனப்பகுதிகள் கட்டடங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இதனால் இந்த அரிய வகை குரங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக வன ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கூட்டம் கூட்டமாக காணப்படும் லங்கூர் குரங்குகள் தற்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக குறைந்து வருகின்றன. எதிர்காலத்தில் குரங்குகளை புகைப்படங்களில் மட்டும் காணக்கூடிய நிலை ஏற்பட்டு விடும் என்றும் வன ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த அரிய வகைக் குரங்குகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.