​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவல்துறை பாதுகாப்பு கோரினார் முகமது சமியின் மனைவி

Published : Mar 14, 2018 4:34 PM



காவல்துறை பாதுகாப்பு கோரினார் முகமது சமியின் மனைவி

Mar 14, 2018 4:34 PM

சமூக வலைத்தளங்கள் வாயிலாக மிரட்டல் விடுக்கப்படுவதால், முகமது சமியின் மனைவி ஹாசின் ஜஹான் காவல்துறை பாதுகாப்பை நாடியுள்ளார். கிரிக்கெட் வீரர் முகமது சமி மீது ஃபேஸ்புக் வாயிலாக பல்வேறு புகார்களை கூறிய ஹாசின் ஜஹான், இதுதொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். இதை தொடர்ந்து முகமது சமி மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனால் முகமது சமியின் ரசிகர்களும், பல்வேறு தரப்பினரும் ஹாசின் ஜஹான் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதாகவும், மிரட்டல் விடுத்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக தமக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி கொல்கத்தா காவல்துறையை அவர் நாடியுள்ளார். மேலும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தமக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் ஜஹான் கேட்டுக் கொண்டுள்ளார்.