​​ அலைச்சறுக்குப் போட்டியில் சாகசம் செய்த வீரர் -வீராங்கனை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அலைச்சறுக்குப் போட்டியில் சாகசம் செய்த வீரர் -வீராங்கனை

அலைச்சறுக்குப் போட்டியில் சாகசம் செய்த வீரர் -வீராங்கனை

Sep 10, 2018 7:29 AM

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற அலைச்சறுக்குப் போட்டியில் பிரேசிலைச் சேர்ந்த வீரர் கேபிரியல் மெடினா முதல் பரிசை தட்டிச் சென்றார்.

அவருக்கு மொத்தம் 17 புள்ளி 86 புள்ளிகள் கிடைத்தன. அலைகளின் வேகத்திற்கேற்ப லாவகமாக பாய்ந்த அவர் குடையைப் போல் கவிழும் அலைகளின் உள்ளே போய் வெளியே வந்த காட்சி பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

மகளிர் பிரிவில் அமெரிக்காவைச் சேர்ந்த காரிசா மூர் இதே போன்ற சாகசத்தை செய்து காட்டி முதலிடம் பெற்றார்.