​​ நர்மதா நதிக்கரையில் 182 அடி உயர சர்தார் பட்டேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நர்மதா நதிக்கரையில் 182 அடி உயர சர்தார் பட்டேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

நர்மதா நதிக்கரையில் 182 அடி உயர சர்தார் பட்டேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

Sep 10, 2018 7:26 AM

குஜராத் மாநிலம் நர்மதா நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் 182 அடி உயர சிலையை பிரதமர் மோடி வரும் அக்டோபர் 31ம் தேதி திறந்து வைக்கிறார்.

டெல்லியில் பேசிய குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, 2013ம் ஆண்டில் மோடி முதலமைச்சராக இருந்தபோது அளித்த வாக்குறுதியின் படி, உலகிலேயே மிகப்பெரிய சிலையாக உலகத் தரமான கட்டுமானத்துடன்  நிறுவியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒற்றுமைக்கு சான்றாக விளங்கும் இந்த சிலையை அமைக்க பாஜகவினர் மண்ணையும் நீரையும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.