​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Published : Mar 14, 2018 4:13 PM

கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Mar 14, 2018 4:13 PM

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடல் சீற்றம் காரணமாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.  வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் உள்ளிட்ட பகுதிகளில், பலத்த காற்றுடன் கடல் சீற்றம் காணப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளைச்  சேர்ந்த  ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. கட்டுமரங்கள், பைபர் படகுகள் கடற்கரையோரம் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் கடற்கரை வெறிச்சோடிக் காணப்படுகிறது.