​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குரங்கணி வனத் தீயில் சிக்கி 11 பேர் பலியானதன் எதிரொலி - ஈரோட்டுக் குழுவை டிரக்கிங் அழைத்துச் சென்ற நபரிடம் போலீசார் விசாரணை

Published : Mar 14, 2018 3:49 PM



குரங்கணி வனத் தீயில் சிக்கி 11 பேர் பலியானதன் எதிரொலி - ஈரோட்டுக் குழுவை டிரக்கிங் அழைத்துச் சென்ற நபரிடம் போலீசார் விசாரணை

Mar 14, 2018 3:49 PM

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் கடந்த ஞாயிறன்று ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி, அங்கு ட்ரக்கிங் சென்ற 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் கடுமையான தீக்காயங்களுடன் மதுரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை மற்றும் ஈரோட்டில் இருந்து இரண்டு குழுவாக ட்ரக்கிங் சென்றவர்கள் முறையான அனுமதி பெறாமல் அங்கு தங்கியதே உயிரிழப்பு ஏற்பட்டதற்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில், 

குரங்கணிக்கு 26 பேரை ட்ரக்கிங் அழைத்துச் சென்ற ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த பிரபு என்பவரிடம் தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் கடந்த ஞாயிறன்று ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி, அங்கு ட்ரக்கிங் சென்ற 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் கடுமையான தீக்காயங்களுடன் மதுரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை மற்றும் ஈரோட்டில் இருந்து இரண்டு குழுவாக ட்ரக்கிங் சென்றவர்கள் முறையான அனுமதி பெறாமல் அங்கு தங்கியதே உயிரிழப்பு ஏற்பட்டதற்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில், ஈரோட்டில் இருந்து ட்ரக்கிங் குழுவை வழி நடத்திச் சென்ற சென்னிமலையைச் சேர்ந்த பிரபு என்ற நபரை, தனிப்படை போலீசார் தேனி அழைத்து வந்துள்ளனர். அவரிடம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ட்ரக்கிங் அழைத்துச் சென்ற அனுபவம் உண்டா? உரிய அனுமதி பெறப்பட்டதா? அனுமதி இல்லாமல் தங்கியது ஏன்? இதற்கு முன்னர் குரங்கணிக்கு ட்ரக்கிங் வந்ததுண்டா? என்பது தொடர்பாக பிரபுவிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவருடன் சேர்த்து உள்ளூர் கெய்டுகள் இருவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரோடு குழுவினர் சென்ற போது அவர்களிடம் உள்ளூர் கெய்டுகள் ஆளுக்கு தலா ஆயிரம் ரூபாய் கேட்டதாகவும், அதற்கு பிரபு கெய்டுகள் வேண்டாம் என்றும் தாமே அழைத்துச் செல்வதாகவும் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி வனத்துறைக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என்று கெய்டுகளிடம் விசாரணை நடத்தப்படுகிறது.