​​ பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து தவறான புள்ளி விவரங்களை பாஜக கூறி வருவதாக, ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து தவறான புள்ளி விவரங்களை பாஜக கூறி வருவதாக, ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து தவறான புள்ளி விவரங்களை பாஜக கூறி வருவதாக, ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

Sep 10, 2018 6:28 AM

நாட்டின், பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து தவறான புள்ளி விவரங்களை பாரதிய ஜனதா கட்சி கூறி வருவதாக, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

நாட்டில், கடந்த 1991ஆம் ஆண்டு தாராளமயமாக்கல் கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், 2006-2007ஆம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 10 புள்ளி பூஜ்யம் 8 விழுக்காடாக இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

இது மத்திய புள்ளியியல் அமைப்பு அதிகாரபூர்வமாக அளித்த தகவல் எனக் குறிப்பிட்டுள்ள ப.சிதம்பரம், ஆனால், நாட்டின் ஜிடிபி குறித்து பாஜகவினர் அளிக்கும் தகவல்கள் அதிகாரப்பூர்வ தகவலுக்கு முரணாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.