​​ இந்தியாவில் இன்சூரன்ஸ் துறை 2020ல் ரூ.20 லட்சம் கோடி வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்ப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியாவில் இன்சூரன்ஸ் துறை 2020ல் ரூ.20 லட்சம் கோடி வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்ப்பு

Published : Sep 09, 2018 7:58 PM

இந்தியாவில் இன்சூரன்ஸ் துறை 2020ல் ரூ.20 லட்சம் கோடி வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்ப்பு

Sep 09, 2018 7:58 PM

இந்தியாவில் இன்சூரன்ஸ் துறை 2020 ஆம் ஆண்டுக்குள் சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10 கோடி குடும்பங்களுக்கு மத்திய அரசு 5 லட்சம் ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு வழங்க இருப்பது இந்த துறை வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. நடுத்தர மக்களின் வளர்ச்சி, இளைய வயதினர் அதிகரிப்பு, பாதுகாப்பு மற்றும் ஓய்வு காலத்திற்கான விழிப்புணர்வு அதிகரிப்பது, இன்சூரன்ஸ் துறை வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் என்று கருதப்படுகிறது.

இன்சூரன்ஸ் துறை சார்ந்த நிறுவனங்கள் மூலம் லட்சக்கணக்கான புதிய  வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அந்த ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை பொது காப்பீட்டில் 48 சதவீதமூம், ஆயுள் காப்பீட்டில் 29 சதவீதமும் சந்தை பங்களிப்பை கொண்டுள்ளன.