​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குளுக்கோமா - கண் அழுத்த நோய் தொடர்பான விழிப்புணர்வு பேரணி

Published : Mar 14, 2018 3:29 PM



குளுக்கோமா - கண் அழுத்த நோய் தொடர்பான விழிப்புணர்வு பேரணி

Mar 14, 2018 3:29 PM

சென்னையில் குளுக்கோமா எனப்படும் கண் அழுத்த நோய் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து, கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனை வரை நடைபெற்ற இந்தப் பேரணியில் கண் அழுத்தம் தவிர்ப்போம், காணொளி காண்போம் என்ற விழிப்புணர்வு பதாகைகளுடன் மருத்துவர்களும், மாணவர்களும் பேரணியாகச் சென்றனர்.

40 வயதுக்கு மேல் உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இந்த நோய் வர வாய்ப்பு உள்ளதாகவும், இந்த நோய் வந்தால் முதலில் பக்கவாட்டு பார்வைகள் தெரியாது என்றும் நடுவில் இருக்கும் பொருட்கள் மட்டுமே தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.